திருவள்ளுவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளுவர் (thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் (பறையர் / சாம்பவர்) குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது.
கடைச் சங்க காலமான கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.[1]
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில்ஒளவையாரின் துணையோடு,மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.
திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
பொருளடக்கம்
[மறை]வாழ்க்கை[தொகு]
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மனம் முடித்ததாக அறியப்படுகிறது [2]. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும், மதுரைநகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
சிறப்பு பெயர்கள்[தொகு]
திருவள்ளுவரை
- நாயனார்,
- தெய்வப்புலவர்,
- செந்நாப்போதர்,
- பெருநாவலர்,
- பொய்யில் புலவர்
- பொய்யாமொழிப் புலவர்
என்று பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
இயற்றிய நூல்கள்[தொகு]
இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் இயற்றியதாக கூறுவர். அவை
ஆயினும் பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலர் இயற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதற்க்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்[2]:
"அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"
இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருவள்ளுவரும் சமயமும்[தொகு]
திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)[மேற்கோள் தேவை]
திருவள்ளுவரும் சைவமும்[தொகு]
திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[3] இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளைசைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[4] திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருத்தியல் கண்காணிப்பாளர் தேர்வுத்துறை முன்னோடியான சோ. சண்முகம் அவர்கள் திருக்குறளில் சைவ சமயம் எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகள் நிரம்பியுள்ளன என்கிறார்.
நினைவுச் சின்னங்கள்[தொகு]
முதன்மைக் கட்டுரைகள்: அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் வள்ளுவர் கோட்டம்
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.
சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.
லண்டன், ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள "ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்" என்னும் கல்வி நிறுவனத்தில், வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- திருக்குறள் விக்கிபுத்தகம்.
- Tamilnation.orgல் திருவள்ளுவர் பற்றிய அறிமுகக் கட்டுரை
- ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவ முடிவு!
ஆதாரம்[தொகு]
- ↑ http://www.keetru.com/dalithmurasu/jul08/thiruvalluvar.php
- ↑ 2.02.1 The Tamil Plutach: containing a summary account of the lives of the poets and poetesses of southern India and Ceylon from the earliest to the present times, with select specimens of their compositions, Page 102, Simon Casie Chitty - January 1, 1859. Ripley & Strong, printers - Publisher
- ↑ சைவ நற்சிந்தனைகள் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- ↑ http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10996&Itemid=139
திருக்குறள்
தொடர்பான நூல் விக்கி நூல்கள் தளத்தில் உள்ளது.
|
No comments:
Post a Comment